Enable Javscript for better performance
அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை- Dinamani

சுடச்சுட

    
    panruti

    காவிரிப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் தேவையில்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வந்தார்.
    அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    முதல்வர் நலம் பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது முதல்வர் நலம் பெற எல்லோரும் பிரார்த்திப்பதுதான் முக்கியக் கடமை.
    காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அரசியல்ரீதியான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்த அன்றே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை (அக்.18) நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
    இந்தச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ அல்லது சட்டப்பேரவைக் கூட்டத்தையோ கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டபோது முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, "கருணாநிதி எதை வேண்டுமானாலும் கூறுவார். அவரை முதல்வர் ஆக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார். அவர் கூறுவதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai