Enable Javscript for better performance
அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணிமண்டபம் கட்ட பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணிமண்டபம் கட்ட பூமி பூஜை

    By DIN  |   Published on : 15th October 2016 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kalam

    அப்துல் கலாம் சமாதிக்கு மலர் தூவி சனிக்கிழமை மரியாதை செலுத்திய அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர்.

    அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சமாதி வளாகத்தில் ரூ. 15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி, ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அவரது சமாதி வளாகத்தில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, அப்துல் கலாம் சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமை வகித்தார். அவர் மற்றும் பேரன் ஷேக் சலீம் உள்பட அவரது குடும்பத்தினர் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு மேலாளர் பி.கே. சிங் மற்றும் அந்த அமைப்பின் பொறியாளர்களும், பள்ளி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    இதையடுத்து சமாதி வளாகத்தில் ரூ. 15 கோடியில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றன. இதில், கலாம் சகோதரர் சிறப்புத் தொழுகை நடத்தி, தேங்காய் உடைத்து பூமி பூஜையை தொடக்கிவைத்தார். இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு பொறியாளர் சீனிவாசுலு மற்றும் தனியார் நிறுவனப் பொறியாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் சிறப்புப் பூஜைகள் நடத்தி கட்டடப் பணிகளைத் தொடக்கிவைத்தனர்.
    இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும், சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai