Enable Javscript for better performance
கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலை கட்டுமானப் பணி: காணொலி மூலம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலை கட்டுமானப் பணி: காணொலி மூலம் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணியின் முக்கிய அம்சமான கான்கிரீட் அமைக்கும் பணியை காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.
    இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 உலைகள் உள்ளன. முதல் உலை செயல்பட தொடங்கி இயங்கி வருகிறது. 2-ஆவது உலையில் அணுப்பிளவு நிகழ்த்தப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்நிலையில் 3, 4-ஆவது உலைகளுக்கான அனுமதி பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கட்டுமானத்துக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
    இதன் தொடர்ச்சியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்தப் பணிகளை ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளனர்.
    கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள இருவரும், அங்கிருந்தபடியே காணொலி காட்சியில் 3, 4-ஆவது அணு உலை கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து பேசுகின்றனர். மேலும், கூடங்குளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய அணுமின்சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, ரஷிய அணுமின் நிறுவனத் தலைவர் லிலார்னிகோ விளாரி, கூடங்குளம் வளாக இயக்குநர் ஆர். எஸ். சுந்தர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
    பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. கூடங்குளத்தில் இதற்கான ஏற்பாடுகûளை அணுமின்நிலைய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai