Enable Javscript for better performance
சசிகுமார் கொலை வழக்கு: மேலும் ஒரு நபரின் வரைபடம் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    சசிகுமார் கொலை வழக்கு: மேலும் ஒரு நபரின் வரைபடம் வெளியீடு

    By DIN  |   Published on : 15th October 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    draw

    கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக, மேலும் ஒரு நபரின் வரைபடத்தை குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
    இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    அதன்படி, சம்பவத்தன்று சசிகுமார் பயணம் செய்த, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து, ஜி.என்.மில்ஸ் வரையிலான சாலையில் பொருத்தப்பட்டுள்ள விடியோ கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    இதன் அடிப்படையில், காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்த விடியோ பதிவுகளின் அடிப்படையில் 4 சந்தேக நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
    இந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட ஒரு சாட்சியின் உதவியுடன் வரையப்பட்டுள்ள மற்றொரு நபரின் புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
    தகவல் அறிந்தோர் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என்று சிபிசிஐடி கேட்டுக் கொண்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai