Enable Javscript for better performance
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரைவில் மகப்பேறு விடுப்புச் சட்ட பலன்கள்: அமைச்சர் பாண்டியராஜன்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரைவில் மகப்பேறு விடுப்புச் சட்ட பலன்கள்: அமைச்சர் பாண்டியராஜன்

    By DIN  |   Published on : 15th October 2016 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pandiyarajan

    லயோலா மேலாண்மை கல்வி நிறுவனம் (லிபா) சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசுகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன். உடன் (இடமிருந்து) லிபா இயக்குநர் பாதிரியார் க

    மகப்பேறு விடுப்புச் சட்டத்தின்கீழ் விரைவில் தனியார் நிறுவனங்களும் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
    லயோலா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பேசினார். அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை முறையாக அளிக்கப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டது.
    இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளது. இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
    ஆனால், தனியார் நிறுவனங்கள் என்கிறபோது, மத்திய -மாநில அரசுகள் இரண்டும் இணைந்து நடைமுறைகளை உருவாக்க வேண்டும். இப்போது மத்திய அரசு 6 விதமான தொழிலாளர் நலச் சட்டங்களை ஒரே சட்டமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 16 -ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது.
    இதை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்றிய பின்னர், தமிழகம் அதனுடைய மகப்பேறு விடுமுறைச் சட்டத்துக்கு முழுமையான வடிவம் கொடுக்க முடியும். அவ்வாறு முழு வடிவம் பெறும்போது, தனியார் நிறுவனங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் வந்துவிடும் என்றார் அவர்.
    அதிமுகவில் சேர மாணவர்களுக்கு அழைப்பு: ஒரு ஊக்கமளிக்கும் அரசியல்வாதியாக மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்ற கேள்விக்குப் பதிலளித்த பாண்டியராஜன், அதிமுகவில் சேருங்கள் என மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து, மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிலேயே 3 ஆவது பெரிய அரசியல் கட்சி அதிமுக. அந்த அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி.
    எந்தவொரு பெரிய பின்னணி இல்லாதவர்களுக்கும் அமைச்சர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுக்கும் ஒரே கட்சி.
    அரசியல் ஒரு சாக்கடை என சிலர் கூறுவர். அதை நம்பவேண்டாம். என்னைப் பொருத்தவரை அரசியல் என்பது மதிப்புமிக்க பணி. எனவே, உங்களைப் போன்ற எம்.பி.ஏ. பட்டதாரிகள் அரசியலுக்கு வரவேண்டும். அதிமுகவில் இணையவேண்டும் என்றார் அவர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai