Enable Javscript for better performance
திருச்சி, நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் : முன்பதிவு இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி, நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் : முன்பதிவு இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்தது.
    இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:


    திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
    ரயில் எண் 06026: அக்டோபர் 29 -ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
    ரயில் எண் 06025: அக்டோபர் 31 -ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு சென்றடையும்.
    இந்த ரயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்,

    மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    சென்னை எழும்பூர்- திருநெல்வேலி சிறப்புகட்டண ரயில்
    ரயில் எண் 06041: அக்டோபர் 29 -ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
    இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


    திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்
    ரயில் எண் 82610: அக்டோபர் 30 -ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
    இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (அக்.15) தொடங்குகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai