Enable Javscript for better performance
நவம்பர் 12-இல் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நவம்பர் 12-இல் நடைபெறுகிறது.
    நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விசாரிக்க மாதம்தோறும் மாநில, தேசிய அளவிலான லோக் அதாலத் விசாரணை நடத்தப்படுகிறது. நிகழாண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) தேசிய அளவில் 8 லோக் அதாலத் எனப்படும் மக்கள் மன்றங்கள் நடைபெற்றுள்ளன.
    இதன் தொடர்ச்சியாக, தேசிய மெகா லோக் அதாலத் நவம்பர் 12-இல் நடத்தப்படுகிறது.
    இதில், வட்ட அளவிலான நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்புள்ள வழக்குகளையும், இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் முடித்து வைக்கும் வகையில் "லோக் அதாலத்' திட்டமிடப்பட்டுள்ளது.
    ஆகவே, வழக்கை முடித்துக்கொள்ள விருப்பப்படுவோர், நீதிமன்ற வளாகங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களை அணுகி தங்களது ஒப்புதலை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai