Enable Javscript for better performance
நியாயவிலைக் கடைகளில் பருப்பு கிடைக்க நடவடிக்கை தேவை- Dinamani

சுடச்சுட

    

    நியாயவிலைக் கடைகளில் பருப்பு கிடைக்க நடவடிக்கை தேவை

    By DIN  |   Published on : 15th October 2016 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramados1

    நியாயவிலைக் கடைகளில் பாமாயில், பருப்புகள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    நியாயவிலைக் கடைகளில் அக்டோபர் மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகிய பொருள்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டம், தாற்காலிகத் திட்டம் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் அரசாணை மூலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, இந்தத் திட்டம் நிகழாண்டு செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இந்தத் திட்டத்தை நீட்டிப்பதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கான சிறப்பு பொது விநியோகத் திட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருளாகும்.
    ஒருவேளை இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை மானியம் வழங்க வேண்டியிருப்பதால், தமிழக அரசு திட்டமிட்டு நிறுத்திவிட்டது என்றால், அது மக்கள் விரோத செயலாகும்.
    எனவே, இந்தத் திட்டத்துக்கான அரசாணையை உடனடியாகப் பிறப்பித்து, தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தடையின்றி கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai