Enable Javscript for better performance
பயிர்க் காப்பீட்டு தவணை தொகையை அரசே ஏற்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    
    vasan1

    காவிரி டெல்டா விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு தவணைத் தொகையை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய அளவில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாத காரணத்தால், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தச் சூழலில் சாகுபடி செய்யாமல் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கான பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியத் தொகை ரூ.367-ஐ அக்டோபர் 15-க்குள்ளும், வயல்களில் நடவு செய்த விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையை நவம்பர் 30-க்குள்ளும் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவிதுள்ளது.
    கடும் வறட்சியால் வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, தவணைத் தொகையை தமிழக அரசே ஏற்கவும், சம்பா சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai