Enable Javscript for better performance
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான கேள்விகள்: முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான கேள்விகள்: முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 15th October 2016 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kadermohideen

    பொது சிவில் சட்டம் தொடர்பான இந்திய சட்ட ஆணையத்தின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினரும் புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் மத்திய பாஜக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய சட்ட ஆணையம் மூலம், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி, கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 16 கேள்விகளைத் தந்து, அவற்றுக்குரிய விடைகளை 45 நாள்களுக்குள் அனுப்ப என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    இந்திய சட்ட ஆணையத்தின் இந்த வினாத்தாள் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி என்பதைவிட, இந்திய முஸ்லிம்கள் உயிரினும் மேலாகப் போற்றிப் பின்பற்றி வரும் ஷரீஅத் சட்டத்தை ஒழிப்பதற்கான சூழ்ச்சி என்றே கருத வேண்டும். இது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்கள் மட்டுமின்றி, நீதி, நேர்மை, சகிப்புத்தன்மை, சமயச் சார்பின்மை, பொது நோக்கம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ள அனைவரும் மத்திய அரசின் இந்தப் போக்குக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
    எனவே, பொது சிவில் சட்டம் தொடர்பான கேள்வித்தாளைப் புறக்கணிப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai