Enable Javscript for better performance
மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kaveri

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது எனக் கூறும் மத்திய அரசு உடனடியாக வாரியத்தை அமைக்க அவசர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    இதில் பங்கேற்ற எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலருமான தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
    தமிழக முதல்வர் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், மத்திய அரசு நீதியை நிலை நாட்டாமல் கர்நாடக அரசுக்கு ஆதரவாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது.
    கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், கர்நாடக மக்களைத் திருப்திபடுத்துவதற்காகவும் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது.
    தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போர் முழக்கம் எழுப்புவோம் என்றார் தமீமுன் அன்சாரி.
    தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலர் வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai