Enable Javscript for better performance
முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு: வங்கி ஊழியர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு: வங்கி ஊழியர்கள் இருவர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறாகப் பேசியதாக கோவை வங்கி ஊழியர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    கோவை, தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புனிதாதேவி. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த, சாய்பாபா காலனியைச் சேர்ந்த சுரேஷ், வடவள்ளியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய வங்கி ஊழியர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) வந்த தகவலைப் பரிமாறிக் கொண்டனர்.
    அவ்வாறு வந்த தகவலை வைத்து, இருவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது வங்கியில் இருந்த புனிதாதேவி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    பின்னர், முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவல்களைப் பரப்பியதாக வங்கி ஊழியர்கள் இருவர் மீதும் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    இதையடுத்து பொய்யான தகவல்களைக் கொண்டு அவதூறு பரப்புதல், தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வங்கி ஊழியர்கள் சுரேஷ், ரமேஷ் ஆகியோர் மீது தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) கைது செய்தனர்.
    பின்னர், 6-ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் அக்டோபர் 26-ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai