Enable Javscript for better performance
முதல்வருக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் 2-ஆவது நாளாக சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    முதல்வருக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் 2-ஆவது நாளாக சிகிச்சை

    By DIN  |   Published on : 15th October 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சிகிச்சை அளித்தனர்.
    உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-இல் அனுமதிக்கப்பட்டார்.
    23 நாளாக சிகிச்சை: 23-ஆவது நாளாக மருத்துவ நிபுணர்கள் குழுவினரோடு, லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல், தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரும் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
    3-ஆவது முறை வருகை: லண்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீல், தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் 3-வது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அக்டோபர் 13-இல் வந்தனர். இதையடுத்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் முதல்வரின் உடல்நிலையைக் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ரோசய்யா நலம் விசாரிப்பு: இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த வெள்ளிக்கிழமை மாலை வந்த முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா சுமார் 30 நிமிஷங்கள் இருந்தார். அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
    பின்னர், அவர் அளித்த பேட்டி:
    முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும், அமைச்சர்களிடமும் கேட்டறிந்தேன். அவர் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். இன்னும் சில நாள்களில் பூரண குணமடைவார். அவர் உடல்நலம் பெற நான் மட்டுமல்ல, ஆயிரமாயிரம் தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதன் பலனாக அவர் பூரண குணடமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
    ரமேஷ் சென்னிதலா நலம் விசாரிப்பு: இதேபோல், மருத்துவமனைக்கு வந்த கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது:-
    அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டியையும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சரையும் சந்தித்தோம். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெற ஒட்டுமொத்த கேரள மக்கள் சார்பில் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.
    ராஜாத்தியம்மாள் வருகை: முன்னதாக, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் வியாழக்கிழமை இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து, சசிகலாவை சந்தித்து முதல்வரின் உடல்நிலை, சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai