Enable Javscript for better performance
வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அமுதாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
    வானிலையைக் கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும் ஆபத்தான உலோகமான பாதரசத்தால் ஆன கருவிகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கருவிகளுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்குத் தடையை உண்டாக்கும் காரணிகள் எவை என்பது குறித்த ஆய்வு அறிக்கையை விஞ்ஞானி அமுதா சமர்ப்பித்துள்ளார்.
    இதற்காக உலக வானிலை ஆய்வு மைய நிறுவனத்தின் பேராசிரியர் "டாக்டர் வில்ஹோ வைசலா விருது' என்பவரின் பெயரில் 1986-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருது செப்டம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா ஆவார்.
    ஆய்வின் முக்கிய கூறு என்ன? 2020-ஆம் ஆண்டுக்கு பாதரசத்தால் ஆன கருவிகளுக்குப் பதில் டிஜிட்டல் கருவிகளை மாற்ற வேண்டும் என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பல வளரும் நாடுகள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கவில்லை. இதனால் பாதரசத்தால் ஆன கருவிகளுக்கான மாற்று கருவிகள் குறித்தும், டிஜிட்டல் கருவிகளுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்கு ஏற்படும் தடைகள் குறித்தும் அமுதா ஆய்வு செய்தார்.
    தமிழகத்தின் நிலை: வானிலை ஆய்வு மையங்களில் வளிமண்டல அழுத்தத்தை அளப்பதற்காக பயன்படுத்தும் பாதரசத்தால் ஆன காற்றழுத்த வெப்பமானியை மாற்றும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள 18 வானிலை ஆய்வு மையங்களில் 12 மையங்களில் இப்போது டிஜிட்டல் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் 24 பகுதி நேர வானிலை ஆய்வு மையங்கள் டிஜிட்டல் கருவிகளுக்கு மாற வேண்டியுள்ளது.
    வெப்பமானி: நாடு முழுவதும் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் உள்ள பாதரசத்தால் ஆன வெப்பமானிகளை டிஜிட்டல் கருவிகளாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai