Enable Javscript for better performance
3, 4 அணு உலைகளுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி: எஸ்.பி.உதயகுமாரன் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    3, 4 அணு உலைகளுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி: எஸ்.பி.உதயகுமாரன் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 15th October 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    udhayakumar

    கூடங்குளத்தில் 3, 4 ஆகிய அணுஉலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் 1000 மெகாவாட் மின்திறன் உள்ள இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடந்து வருகிறது. அதன் அருகே 3, 4 ஆகிய அணுஉலைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்து அடித்தளம் கான்கிரீட் அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெறுகிறது.
    இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
    3, 4 ஆகிய அணு உலைகளுக்கான கான்கிரீட் பணியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், பிரதமர் மோடியும் தொடங்கி வைக்கிறார்கள்.
    தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் இந்த அணுஉலைகள் எதற்கு?. இதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. எனவே தமிழர்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுங்கள்.
    உங்கள் நெஞ்சில் கருப்புக்கொடி ஏந்துங்கள். இனி என்ன செய்வது என்பது பற்றி அனைவருமாக விரைவில் கூடிப் பேசுவோம். உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், பரிந்துரைகளை எழுதுங்கள் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai