தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1 லட்சம் மருத்துவர்கள் தேவை உள்ளது.
ஆனால் தற்போது சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.