தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
Published on
Updated on
1 min read

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் எழுத்தார்வத்தைத் தூண்டும் விதத்தில் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன.
பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்: உழவுக்கு உயிர் கொடு, நல்ல நூல் - வாழ்வின் திறவுகோல், மரம் மண்ணின் வரம்.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்: இன்றைய வேலைவாய்ப்பு சவால்கள், ஆறும் - போரும், சமூக வலைதளத்தின் எழுச்சியும், சமூக மாற்றமும்.
கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல் தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு, தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழியை இணைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் கட்டுரைக்கான பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும். தகவல் தெரிவிக்க வசதியாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணைக் குறிப்பிட வேண்டும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் ஜூன் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கான பரிசு விவரம்: முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 1,500, 3-ஆவது பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மேலும், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 500, நெய்வேலி மாணவர்கள் 6 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 500 வழங்கப்படும்.
கட்டுரைகளை, "செயலர் - நெய்வேலி புத்தகக் கண்காட்சி, செயல் இயக்குநர் - மனித வளம், மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், என்எல்சி இந்தியா லிமிடெட், வட்டம் - 2, நெய்வேலி - 607 801' என்ற முகவரிக்கு ஜூன் 16-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com