

திமுகவின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சோழவரம், அயப்பாக்கம் மற்றும் பாடியநல்லூர் ஆகிய பகுதிகளில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து, தூர்வாரி சீரமைத்துள்ள குளங்களை நேரில் பார்வையிட்டார்.
மேலும், குளங்களின் கரைகளில் வேம்பு, புங்கம் உள்ளிட்ட செடிகளை ஊன்றிய மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், குளக்கரைகளை மேம்படுத்த வேண்டும் என கழக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து, பருத்திப்பட்டு வழியாக மு.க.ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கி உரையாடியதோடு, எதிர்வரும் மழைக்காலத்தில் நீர் சேமிக்கும் வகையில் சரியான நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.