

பள்ளிப் பாடத்தில் காயிதேமில்லத் பாடம் மீண்டும் இடம்பெற வேண்டுமென மனித நேய ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதம்:
தமிமுன் அன்சாரி: நமது மாநிலத்தின் பாடத் திட்டத்தை சிங்கப்பூர் நாட்டின் பாடத் திட்டத்துக்கு இணையான வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: பாடத் திட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்து கல்வித் துறை சார்ந்த குழுவினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வர்.
சிங்கப்பூர், மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள பாடத் திட்டங்கள் ஆய்வு செய்யப்படும். இதற்கான ஆய்வுக் குழுவின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாலே பாடத் திட்டங்களில் எத்தகைய மாற்றங்கள் வரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அன்சாரி: 5-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் காயிதே மில்லத் குறித்த பாடம் இடம்பெற்றிருந்தது. இப்போது இல்லை. அதனை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.