மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புப் புத்தகம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விரைவாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் தனபால் உறுதி அளித்தார்.
சட்டப்பேரவையில் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசும்போது, ஒவ்வொரு துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகம் எப்போதும் முதல் நாள் இரவு 11 மணிக்கு மேலேயே உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது என்றார்.
அதற்கு பேரவைத் தலைவர் தனபால் கூறியது: சட்டப்பேரவைத் துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இங்கேயே உத்தரவிடுகிறேன். எம்.எல்.ஏ.க்களுக்கு முன்னதாகவே கொள்கை விளக்கக் குறிப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.