பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்ததா என்ற கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:-
நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 266 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் சேருகின்றனர். கர்நாடகத்தில் 207 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கு 55 ஆயிரம் மாணவர்களே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்றனர். தமிழகத்தில் 584 கல்லூரிகள் இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன், தனியாரின் 35 சதவீத இடங்களையும் அரசுக்கே ஒதுக்கி விடுகின்றன. இதனால், 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 7 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை அதிகமானதால் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறைந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்ததால் மாணவர் சேர்க்கை குறையவில்லை என்றார் அமைச்சர் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.