ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டு வரும் தமிழ் மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது.
இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு அவரது வாழ்வும், உபதேசங்களும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் மற்றும் நீராதாரங்களைப் பராமரிப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பை உணர்த்தும் சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் பங்கு பெற விரும்புவோர், ஏ-4 வெள்ளைத்தாளில் 3 பக்கத்துக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும். சிறுகதைகளை அனுப்ப கடைசி தேதி ஜூலை 25-ஆம் தேதி.
முதல் பரிசு ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.8,000, 3-ஆம் பரிசு ரூ.6,000; இத்துடன் 6 பேருக்கு தலா ரூ.1,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும்.
சிறுகதைகள் ''ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31-ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004'' என்ற விலாசம் அல்லது srv@chennaimath.org, mail@chennaimath.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.