

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆனால், அணைகளைத் தூர்வார இதை விட நல்ல நேரம் கிடைக்காது.
மழை நிலவரம் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப், தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்து பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், தமிழகத்தில் உள்ள அணைகளின் தற்போதைய நீர்மட்ட நிலவரமும், இதே நாளில் கடந்த ஆண்டு நீர்மட்ட நிலவரமும் ஒப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போதுதான் தென்மேற்குப் பருவ மழை சூடுபிடித்துள்ளது.
சென்னையில், கடந்த 2003ம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற மிக மோசமான வறட்சி காணப்படுகிறது.
சாத்தனூர், கிருஷ்ணகிரி, பொறந்தலாறு, திருமூர்த்தி, அமராவதி, பெருவரிப்பள்ளம், மணிமுத்தாறு, சிறுவாணி அணைகளின் நீர்மட்ட நிலவரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.