இரட்டை இலை சின்னத்தை அதிமுக தொண்டர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் என்றார் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற விடாமல் செய்தவர் ஜெயலலிதா. அந்த வரலாற்றை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் மறந்து விடக்கூடாது.
இரட்டை இலை சின்னத்தை எந்தத் தலைவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதை சொந்தம் கொண்டாடும் உரிமை தொண்டர்களுக்கே உண்டு. பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.
ஜெயலலிதா பொதுச் செயலராக வரக்கூடாது என தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்ட பி.எச். பாண்டியன்தான் இந்தப் பிரிவினைக்குக் காரணம்.
இரட்டை இலை சின்னத்தை யார் முடக்க நினைத்தாலும், அவர்கள் துரோகிகள் என்பது தொண்டர்களின் நிலைப்பாடு. பிரிந்திருப்பவர்கள் இணைந்து செயல்பட்டால் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. மீண்டும் வரலாற்றைப் படைக்க முடியும் என்றார் நடராசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.