உதகை: தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உதகையில் நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
எதிரிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் இந்த அரசு ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் இது உறுதி.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2000-மாவது ஆண்டில் நடைபெற்ற தேயிலை விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண முடியாத மு.க.ஸ்டாலின், தற்போதைய சூழலில் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தன்னால்தான் தீர்வு காண முடியும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
தேயிலை விவசாயிகளின் நலனுக்காக நியாய விலை கடையிலும், ஊட்டி டீ என்ற பெயரில் பொது விநியோகம் என்ற முறையிலும் தேயிலை தூளை விற்பனை செய்து வருவதால். தேயிலை விவசாயிகளுக்கு மட்டுமின்றி கூட்டுறவு துறைக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.