கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய சயன் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் மர்ம நபர்களால் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தார். சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கனகராஜ் ஆத்தூர் அருகே கார் மோதி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.
இவரது கூட்டாளியான சயன், அவரது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் கேரளத்துக்கு காரில் சென்றபோது ஏப்ரல் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் வினுபிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சயன் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சயனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.