அதிமுக ஆட்சி எங்களால் கவிழாது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சி எங்களால் கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி எங்களால் கவிழாது: ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

அதிமுக ஆட்சி எங்களால் கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி அவைத் தலைவர் மதுசூதனன், செய்தியாளர்களிடம் கூறியது:
இன்னும் 2 மாதங்களில் தற்போதைய அரசு கவிழ்ந்துவிடும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர் என்றார்.
அதன் பின்னர், சென்னை செல்ல மதுரை விமான நிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், அரசு 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என மதுசூதனன் கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி எங்களால் கவிழாது என்றார்.
ராஜபாளையம்: முன்னதாக, ராம்கோ நிறுவனர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை ராஜபாளையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை நல்ல நிலையில் உள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில், தொண்டர்களின் இயக்கமாக, மக்களாட்சி தத்துவத்தின்படியே அதிமுக இயங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக நடைபெறும் இந்த தர்ம யுத்தம் மக்களின் நல் ஆதரவோடு வெற்றிபெறும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. அடித்தட்டு மக்கள், பொருளாதார வசதி பெற வேண்டும் என்பதற்காக மாநிலத்தின் வருவாயில் 48 சதவீதம் சமூக நலத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் அந்த இலக்கில் இருந்து தடம் புரண்டுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com