

ஆதிதிராவிட மாணவியருக்கான கல்வி ஊக்கத் தொகையை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆதிதிராவிடர் -பழங்குடியின மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 36.38 கோடி ரூபாய் நிதி, மாநில அரசின் குளறுபடிகளால் வங்கிக் கணக்கில் இருந்து மீண்டும் மத்திய அரசுக்கே திரும்பியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளிலும், பிளஸ் 1 முதலும் படிக்கும் ஆதிதிராவிட -பழங்குடியின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகை ரூ.2,598.17 கோடி இன்னும் மத்திய அரசிடமே நிலுவையில் இருக்கிறது என்று தெரிய வருகிறது.
எனவே, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் உடனடியாக தில்லி சென்று, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ரூ.2500 கோடிக்கும் மேலான இந்த நிதியை பெற வேண்டும்.
எட்டாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிடர் -பழங்குடியின மாணவியருக்கு ரூ.3,000 ரூபாய் வைப்புத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.