தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.368 அதிகரிப்பு

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து, வியாழக்கிழமை மாலை ரூ.22,136-க்கு விற்பனையானது. உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, சர்வதேச சந்தையில் தங்கத்தின்
Updated on
1 min read

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து, வியாழக்கிழமை மாலை ரூ.22,136-க்கு விற்பனையானது. உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை உயர்கிறது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.46 வீதம் உயர்ந்து, ரூ.2,767-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 40 பைசா அதிகரித்து, ரூ. 42.10-க்கு விற்கப்பட்டது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 ஏற்றம் கண்டு, ரூ.42,100-ஆக விற்பனையானது.
வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,767
1 பவுன் தங்கம் 22,136
1 கிராம் வெள்ளி 42.10
1 கிலோ வெள்ளி 42,100
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,721
1 பவுன் தங்கம் 21,768
1 கிராம் வெள்ளி 41.70
1 கிலோ வெள்ளி 41,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com