காங்கிரஸ் அரசின் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெற்று அறிக்கை என அதிமுக கருத்து தெரிவித்துள்ளது.
முதல்வர் நாராயணசாமி ரூ.6945 கோடிக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர்
அதிமுக குழுத் தலைவர் ஏ.அன்பழகன் கூறியதாவது:
காங்கிரஸ் அரசு தான் அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, மாநில வளர்ச்சியிலோ அரசு கவனம் செலுத்தவில்லை. போக்குவரத்து நெரிசலில் மக்கள் நாள்தோறும் அல்லப்படும் நிலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படவில்லை.
நலத்திட்டங்களான முதியோர், விதவை, வீடு கட்ட மானிய உதவி எதையும் புதிய பயனாளிகளுக்கு வழங்கவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு சென்டாக் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அறிவித்தும் செய்யவில்லை.
1 லட்சம் ஏழைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படவில்லை.
ஆயிரக்கணக்கில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வேலைவாய்ப்பு திட்டங்கள் எதுவுமில்லை.
மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் காங்கிரஸ் அரசு தனது இயலாமையை மறைக்க திசை திருப்புவதற்காக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நிவாரணத் தொகை தரப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை இதுவரைநிறைவேற்றாமல் மீண்டும் செயல்படுத்த முடியாத பட்ஜெட் என்ற வெற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளது என்றார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.