சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை சுமூகமாக செயல்படுத்த நடவடிக்கை: முதல்வர்

புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) சுமூகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) சுமூகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சுமூகமாக செயல்படுத்த அரசு முனைந்துள்ளது. தற்போதுள்ள வணிகர்களில் 80 சதவீதத்துக்கு மேல் ஜிஎஸ்டி வரிக்கு மாற பதிவு செய்துள்ளனர். இதற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு
கூட்டுறவு துறையில் நவீன அரிசி ஆலையில் 3 மெ.டன் அளவு அரைக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் அட்டவணை இனத்தவருக்கு வட்டி மானியம் 4-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற உறுப்பினர்களுக்கு 3-இல் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கூட்டுறவு ஒன்றியத்தில தொழிலாளர் துறை சார்பில் திறன்மேம்பாட்டு செயல் திட்டம் செயல்படுத்தப்படும். நஷ்டத்தில் இயங்கு கூட்டுறவு அமைப்புகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து தீர்வு காணப்படும்.

கறவைப் பசுக்களின் தீவனத் தேவைகளை ஈடு செய்ய அசோலா தாவரம் பயிரிட இடுபொருள்கள் வழங்க பால் உற்த்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி தரப்படும்.

கூட்டுறவு நூற்பாலை மற்றும் சர்க்கரை ஆலைகள் புனரமைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com