மே 28-இல் மேட்டூர் அணை தூர்வாரும் பணி

மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (மே 28) துவக்கி வைக்கிறார்.
Updated on
1 min read

மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (மே 28) துவக்கி வைக்கிறார்.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கடந்த 83 ஆண்டுகளில் இதுவரை மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சுமார் 20 சதவீத அளவுக்கு தூர் படித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தூர் காரணமாக மேட்டூர் அணையில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. வாப்காஸ் நிறுவனம் மூலம் வண்டல் மண் படிந்துள்ள இடங்கள் மற்றும் எவ்வளவு என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் முறைகளும் ஆலோசிக்கப்பட்டன. விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராவல் மண்ணை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 டிராக்டரும், மண்பாண்டம் செய்வோருக்கு 20 டிராக்டரும், கிராவல் மண் நபருக்கு பத்து டிராக்டரும் அள்ளிக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
முதல்கட்டமாக, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் வலதுகரையில் பண்ணவாடி, மூலக்காடு பகுதிகளிலும், இடதுகரையில் கூணாண்டியூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும் தருமபுரி மாவட்டம், நாகமரை கிராமத்தில் ஆசாரி கிணற்றுப் பள்ளம், சித்தையன்கோயில் ஏரிப் பகுதிகளிலும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப் பணிகளை இம் மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். இதற்கான ஆயத்தப் பணிகளை வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com