தமிழகத்துக்கு கூடுதல் அரிசி வாங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாக 2.92 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தமிழகத்தில் நடைமுறையில்உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தடையின்றி அரிசியினை விநியோகம் செய்ய மாதத்துக்கு 3.20 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. அதாவது மாதத்துக்கு கூடுதலாக 28 ஆயிரம் மெட்ரிக் டன் தேவை உள்ளது.
இந்த இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்த விலையான மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3.85 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ரூ.962.50 கோடிக்கு இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என வியாழக்கிழமை வெளியான தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.