

உண்மை நிலவரம் தெரியாமல், ஆதாரமில்லாமல் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி என்றார் அனிதாவின் அண்ணன் ச. மணிரத்தினம் .
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத நிலையில் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ச. அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்த புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதல்வர் கே. எடப்பாடி பழனிசாமி,மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்து,அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்நிலையில் அனிதாவின் அண்ணன் ச. மணிரத்தினம் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
எங்களுக்கு உதவிய திமுக மாவட்டச் செயலர் சிவசங்கர், பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மீது டாக்டர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறார்.
எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பதை அவர் நேரடியாகப் பார்த்தது கிடையாது. அது பற்றி தெரிந்தது போலப் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே நாங்கள் துன்பத்தில் உள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசுவதால் மேலும் கஷ்டமாக உள்ளது. ஒரு காலத்தில் அவரை அண்ணனாக நினைத்துள்ளேன். அனிதாவின் இறப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் இணைந்து போராடி வருகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.