

கர்நாடக நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வியாழக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் ஒரு வாரமாகவே தண்ணீர் வரத்தும் அதிகரித்திருக்கிறது.
கடந்த சனிக்கிழமை நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரம் கன அடியாகக் கூடியது. பிறகு, செவ்வாய்க்கிழமை மீண்டும் நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்தில் வியாழக்கிழமை நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.