டி.டி.வி.தினகரனுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி வரை கெடு வைத்துள்ளோம் என்று, அவரது ஆதரவு பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே. கதிர்காமு பெயருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக, தேனி காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் கே. கதிர்காமு. தேனியில் உள்ள இவரது வீட்டு முகவரிக்கு, கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கடிதத்தில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இல்லையெனில், உயிருடன் இருக்க முடியாது. செப்டம்பர் 12-ஆம் தேதி தினகரனுக்கு கெடு வைத்துள்ளோம். மேலும், எங்களை ஆதரிப்பவர்களுக்கு தலா ரூ.10 கோடி தர உள்ளோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து, கே. கதிர்காமு மகன் அசோக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கே. கதிர்காமு வீட்டின் முன் போலீஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.