

புளூவேல் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த இருவர் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர். 13 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. புதுவையில் இது தடுக்கப்பட வேண்டும்.
பெற்றோர் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புளூவேல் விளையாட்டை தடை செய்ய நானும், டிஜிபியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம்.
புளூவேல் செயலியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தெரிவிக்க உள்ளோம். புதுவை மாநிலத்தில் உள்ள இணைய மையங்களுக்கும் விரைவில் உரிய வழிகாட்டுதல் தரப்படும்.
ஜிப்மர், புதுவை அரசு மருத்துவமனையில் புளூவேல் விளையாட்டு ஆலோசனை மையங்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.