திருக்கடையூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை காரைக்காலுக்கு மீன் ஏற்றிவரச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மீனவப் பெண்கள் இறந்தனர்.
17 மீனவப் பெண்கள் மீன் ஏற்றி வருவதற்காக மடத்துக்குப்பத்திலிருந்து காரைக்காலுக்கு மினி வேனில் புறப்பட்டுச் சென்றனர். திருவாலியைச் சேர்ந்த வெங்கடேசன் மினி வேனை ஓட்டினார்.
காரைக்கால்-சீர்காழி சாலையில் (கிழக்கு கடற்கரை சாலை) திருக்கடையூர் அருகே சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் நாயக்கர்குப்பம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி வள்ளி (45) சம்பவ இடத்திலேயே இறந்தார். மடத்துக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி குள்ளம்மாள் (50) மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சீர்காழி உட்காவல் கோட்டம், பொறையாறு போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் காயமடைந்த 15 பேரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.