சுடச்சுட

  

  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 05th February 2017 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  கோவை மாவட்டம் போத்தனூரைச் சேர்ந்தவர் ஹக்கீம்(35). கடந்த 2013-இல் நவம்பர் 9-ஆம் தேதி, வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த மனைவி, சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ் ஹக்கீம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
  இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஹக்கீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016 ஜூன் 4 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஹக்கீம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, என்.ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹக்கீமுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.
  சொந்த மகளுக்கே பாலியல் தொல்லை அளித்ததை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. மனித உருவில் இருந்தாலும், குற்றவாளியின் நடத்தை மிருகத்தைப் போல இருக்கிறது. அதனால் அவருக்கு விதிக்கப்பட்ட இந்த ஆயுள் தண்டனை சரியானதே என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai