Enable Javscript for better performance
TN Police seize 500 kg of endangered sea cucumber- Dinamani

சுடச்சுட

    

    ராமேஸ்வரத்தில் 500 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 11th July 2017 06:05 PM  |   அ+அ அ-   |    |  

    endangered_sea_cucumber

     

    ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் அரிய வகை கடல் வாழ் உயிரனங்கள் உள்ளன. இவைகள் பாதுகாக்கப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    இந்த அரிய வகை உயிரனங்களின் கடத்தல் சம்பவங்கள் அப்பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தோடு காவல்துறை
    சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரம் புது ரோடு வனப்பகுதி அருகே இந்த அரிய வகை கடல் உயிரனங்களில் ஒன்றான கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக
    காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

    இந்த தகவலின் அடிப்படையில் துரித நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக காவல்துறை மற்றும் மண்டபம் பகுதி வன அலுவலர்கள், சுமார் 500 கிலோ கடல்
    அட்டைகள் அடங்கிய கன்டெய்னர்களை செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனர்.

    ஆனால், இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து முழு விவரம் தெரியாத காரணத்தால் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் தேடுதல்
    வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, மண்டபம் பகுதி கடலோர காவல்படையால் 380 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
    கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, வனத்துறை பாதுகாப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 1-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த தொடர் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாக கடந்த 3 தினங்களில் மட்டும் 780 கிலோ எடையுள்ள இந்த அரிய வகை கடல் அட்டைகள்
    பிடிபட்டுள்ளன. இதுவரையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp