
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் 2-வது நாளாக இன்று நடைபெற்றது.
அப்போது பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், முதல்வரை அழைத்து துணைமானியக் கோரிக்கைகள் மீதான பிரேரணைகளை வாசிக்குமாறு கூறினார்.
அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
அன்பழகன் (அதிமுக): துணை மானியக் கோரிக்கை விவாதம் தேவையா. வியாபாரிகள் வரிச்சலுகை கிடைக்குமா என எதிர்நோக்கி உள்ளனர். ஏன் முழு பட்ஜெட் போடவில்லை. 7 ஆண்டுகளாக தொடர்ந்து இ்டைக்கால பட்ஜெட்டே போடுகின்றனர். புதுச்சேரி மாநிலம் இதில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தான் தனிக்கணக்கு தொடங்கப்பட்டது. வறட்சி நிவாரணம் 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏன் புதுச்சேரி மாநிலம் வாங்கவில்லை. விவசாயிகள் மீது அக்கறையில்லை.
அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்.
3 மாதம் மட்டுமே அரிசி போட்டனர். 8 மாதம் அரிசி போடவில்லை. குடும்பத்துக்கு அதற்கான தொகை ரூ.600-ஐ வங்கிக் கணக்கில் போடுங்கள். குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருவர் கூட பயன்பெறவில்லை.
பேரவைத் தலைவர்: நிகழாண்டுக்கான கூடுதல் நிதி கோரி தான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது முழு பட்ஜெட் இல்லை.
முதல்வர்: சில துறைகளில் ஏற்கெனவே கடந்த 2016-17 வரவு செலவுத் திட்டத்தில் துறைகளுக்கு ஒதுக்கிய நிதிகளை கணக்கிட்டு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தனர். இதனால் நமது மாநிலத்தில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் கலால் வருவாய் குறைந்தது. மனை வாங்குவோர், தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவால் வருவாய் இழப்பு. இதனால் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மதுபானக்கடைகள் மீதான உத்தரரவு, மனைகள் பதிவு செய்தல் தொடர்பான உத்தரவால் வருவாய் குறைந்து விட்டது. இதை சரி செய்ய வேண்டும் கடந்த ஆண்டு திட்டமல்லா செலவாக ரூ.1000 கோடி தர வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றி உள்ளோம். தமிழகம் கூட நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் சீரமைக்க இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.6665 கோடியில் ரூ.4000 கோடி மாநில வருவாயாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து 27 சதவீதமாக நிதி கிடைக்கிறது. முந்தைய காலங்களில் மத்திய அரசு திட்டங்களுக்கு தரும் மானியம் குறைந்து விட்டது. 2017-18-ல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளது.
2004-05-ல் திட்டமல்லாச் செலவு ஊதியம் உள்பட ரூ.691 கோடி மட்டுமே செலவானது
10-11-1761 கோடி, 15-16-ல் ரூ.2689 கோடி, 15 நிறுவனங்களில் ரூ.596 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 3 நிறுவனங்கள் தான் லாபம். கூட்டுறவு ரூ.489 கோடி, பாசிக், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கூட்டுறவு ஆலை, கடந்த ஆட்சியில் நஷ்டம் ஏற்பட்டது அதை சரி செய்யவில்லை. 3 தொகுதிகளில் சேர்ந்தவர்களுக்கு வேலை தருவதற்காக அரசு சார்பு நிறுவனங்களை நஷ்டத்தில் ஆழ்த்தினர்.
தற்போது இவற்றை நாங்கள் சீரமைத்து வருகிறோம் துறைமுக மேம்பாட்டுத் திட்டம், வருவாயை அதிகரிப்பது, திட்டமில்லா செலவு நிதி 2010-11-ல் ரூ.493 கோடி, 2015-16-ல் ரூ. 556 கோடியாக ஆகி விட்டது. மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி தட்டுப்பாடு இருந்தாலும் நாங்கள் நிதி ஒதுக்கி
நிறைவேற்றி வருகிறோம்.
மாநில மக்கள் மீது இதற்கு மேல் வரிச்சுமையை திணிக்க முடியாது.
லட்சுமி நாராயணன் (காங்.): அதிமுக உறுப்பினர் கடந்த 6 மாதங்களில் தனது கையால் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார் 10 கிலோ 20 கிலோ அரிசி போடப்பட்டு வருகிறது.
அமைச்சர் கந்தசாமி: ரேஷன் கடைகளில் அரிசி தவறாமல் போடப்பட்டு வருகிறது. 8 மாதங்கள் தான் ஆகிறது காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்து. முந்தை அரசு தர வேண்டிய 3 மாதங்கள் அரிசியையும் சேர்த்து தான் தந்துள்ளோம். எங்கள் ஆட்சியைக் குறை கூறத்தேவையில்லை. முந்தைய ஆட்சியில் உங்கள் கேள்விக்கு பதில் வராது 3 நிமிடங்கள் மட்டுமே சட்டப்பேரவையை நடத்தினர்.
கூட்டுறவு நிறுவனங்கள் இழப்புக்கு முந்தைய ஆட்சி தான் காரணம், பாப்ஸ்கோ நிறுவனத்தில் 515 பேரை ஏன் நியமித்தார்கள். அனைவரும் அமர்ந்து பேசி, ஆலோசித்தால் தான் அரசு நிறுவனங்களை காப்பாற்ற முடியும். துணைநிலை ஆளுநர் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர். தமிழத்தில் 39 எம்.பிக்கள் இருந்தும் ஒரு நிதி கூட வரவில்லை. புதுவைக்கு ஓரே எம்.பி தான் உள்ளனர்.
அன்பழகன்: நிதி நெருக்கடியை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. முதியோர் உதவித்தொகைக்காகன 22000 விண்ணப்பங்கள் என்ன ஆனது?.
முதல்வர்: நமது மாநிலம் யூனியன் பிரதேசம். அதிகாரிகள், மத்திய உள்துறை அனுமதியுடன் தான் நிதித்துறை அமைச்சகத்தை அணுக முடியும். ஏப்ரல் மாதத்திலேயே முழு பட்ஜெட் போடப்படும். நாங்கள் பட்ஜெட் போட தயார் தான். நிதி தருவதாக மத்திய அரசு உறுதி கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே முழு பட்ஜெட் போடப்படும்.
வையாபுரி மணிகண்டன் (அதிமுக): முந்தைய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தான் நீங்கள் பதவிக்கு வந்தீர்கள். அதே முறையில் நீங்களும் அரசை நடத்த் போகிறீர்களா.