சுடச்சுட

  

  தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் வருகிறது மாற்றம்?

  By DIN  |   Published on : 11th May 2017 04:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  +2

   

  சென்னை: நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படுவது மரபாக இருந்து வந்தது. ஆனால் இம்முறையின் காரணமாக மற்ற மாணவர்களுக்கு ஒருவித மனா உளைச்சல் ஏற்படும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட சில பள்ளிகள் தங்களை வணிக ரீதியில் முன்னிறுத்தும் நிலை உருவாவதாகவும் கல்வி நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

  அதனை ஏற்று தற்பொழுது நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வர உள்ளது.இதன்படி நாளை வெளியாகும் +2 முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும், மாணவர்கள் தங்களது தனிப்பட்ட மதிப்பெண்களை இணையதளம் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல் பள்ளிகளுக்கு முடிவுகள் அனுப்பப்படும்.

  இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai