Enable Javscript for better performance
ஆலங்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அன்பு (7). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்றுவந்த இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
    இதனால், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்பு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai