Enable Javscript for better performance
நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

    By DIN  |   Published on : 22nd October 2017 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EPS

    திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு நீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
    அவர்களது கோரிக்கையை ஏற்று, நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 23-ஆம் தேதி முதல் நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திலுள்ள 4 ஆயிரத்து 831 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai