Enable Javscript for better performance
பொறையாறு பணிமனை விபத்து: பழ.நெடுமாறன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    
    nedumaran

    பொறையாறு பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் உள்ள தொழிலாளர் தங்குமிடத்தில் உறங்கிக்கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
    70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்தப் பணிமனையைச் சீரமைக்குமாறு தொழிலாளர்களின் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியும்கூட அரசு அதை நடைமுறைப்படுத்த முன்வராததன் விளைவாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    தமிழகம் எங்கும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளின் கட்டடங்கள் குறித்த விசாரணைக் குழு ஒன்றைஅமைக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai