Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சல்: காங்கயத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மர்மக் காய்ச்சல்: காங்கயத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர் சாவு

    By DIN  |   Published on : 22nd October 2017 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கயத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    காங்கயம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்திசாமி. இவர், காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (16). இவர், காங்கயம் அருகே உள்ள படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    இந்நிலையில், கடந்த வாரம் ரஞ்சித்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒருநாள் மட்டும் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால், அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்துவந்ததால் காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai