Enable Javscript for better performance
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை சனிக்கிழமை செய்யப்பட்டது. 
    முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளின் உடல் எடையைக் குறிப்பிட்ட காலத்தில் எடை பரிசோதனை செய்வது வழக்கமாகும். அதன்படி, தொரப்பள்ளியில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான எடை மேடைக்கு யானைகள் சனிக்கிழமை வரவழைக்கப்பட்டு புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் சரவணன் தலைமையில், சரணாலய கால்நடை மருத்துவர் விஜயராகவன் மேற்பார்வையில் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai