Enable Javscript for better performance
மெர்சல் விவகாரம்; தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கும் மோடிக்கும் முடிச்சு போட கூடாது: கே.பி.முனுசாமி- Dinamani

சுடச்சுட

    

    மெர்சல் விவகாரம்; தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கும் மோடிக்கும் முடிச்சு போட கூடாது: கே.பி.முனுசாமி

    By DIN  |   Published on : 22nd October 2017 07:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kpmunusamy

    புதுதில்லி: மெர்சல் பட விவகாரத்தில் ஆர்வ கோளாறில் பேசும் தமிழக பாஜ தலைவர்கள் பேச்சுக்கு பிரதமர் மோடிக்கும் முடிச்சு போடக்கூடாது என்று
    அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

    நாளை நடைபெறும் இரட்டை இலை விசாரணை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தில்லி சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கே.பி. முனுசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

    பொதுவாழ்வில் இருப்போருக்கு சகிப்புத்தன்மை அவசியம். மெர்சல் விவகாரத்தில் ஆர்வ கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் பேசுகின்றனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி எந்த செய்தியாளரிடமாவது வந்து மெர்சல் பற்றி கூறினாரா? பிறகு எதற்கு மெர்சல் பட விவகாரத்தில் பிரதமரை தொடர்பு படுத்த வேண்டும் என்றார்.

    அதிமுக வேறு ஒரு எந்த கட்சியுமோ அதன் தலைவரோ வந்து காப்பாற்ற வேண்டிய நிலைமையில் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கு தந்தை எம்ஜிஆர்; ஜெயலலிதாதான். அவர்கள்தான் எங்களுக்கு எல்லாமும் என்றவர் அதிமுக அரசை பிரதமர் மோடி காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் முனுசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai