Enable Javscript for better performance
ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியானதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
    சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை மாலை 6.08 மணிக்கு ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. 
    அப்போது, ஒரு பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு வெளியேறி நடைமேடையில் நின்றனர். 
    இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் உடனடியாகச் சென்று புகை வெளியேறியது குறித்து பார்வையிட்டனர். பெட்டிக்கு அடியில் பிரேக் அருகிலிருந்து புகை வெளியானதாகக் கூறப்படுகிறது. உடனடியாக சரிசெய்யப்பட்டு, சுமார் 20 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai