Enable Javscript for better performance
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: வருவாய்த் துறை அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: வருவாய்த் துறை அமைச்சர்

    By DIN  |   Published on : 22nd October 2017 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு தயாராக இருக்கிறது என்றார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
    வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    இந்தக் கூட்டத்தின் மூலம் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், வடகிழக்கு பருவ மழை பெருமழையாக இருக்கும்பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் வகையில் தயாராய் இருக்கிறோம் என்றார் உதயகுமார்.
    முன்னதாக, கூட்டத்தில் அவர் பேசியது: 
    நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்படவுள்ளது. எனவே, கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, அதிக நீர் பிடிப்புப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழையின்போது விவசாயிகள், பயிர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் உதயகுமார்.
    கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டெங்கு கண்காணிப்பு அலுவலர் கே. சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசுச் செயலர் பி. சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன், ஆர்.கே. பாரதிமோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai